Association resolutions
Resolutions for the welfare of dealers
டீலர்களின் நலனுக்கான சங்கத் தீர்மானங்கள்
Adopted by the TAMILNADU SLD VTS STICKER DEALERS ASSOCIATION on three matters affecting SLD, VTS and speedometer dealers across Tamil Nadu.
The following resolutions were discussed and adopted for the welfare of dealers. They set out how the association expects its members to be treated, and to behave, at R.T.O offices.
டீலர்களின் நலனுக்காக கீழே கொடுக்கப்பட்டுள்ள மூன்று விஷயங்கள் அடிப்படையில் விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. R.T.O அலுவலகங்களில் உறுப்பினர்கள் எவ்வாறு நடத்தப்பட வேண்டும், எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதை இவை தெரிவிக்கின்றன.
-
Resolution 1தீர்மானம் – 1
Recognition and fair conduct at RTO offices
R.T.O அலுவலகங்களில் அங்கீகாரமும் நியாயமான நடைமுறையும்
- Authorised dealers are present at every R.T.O office, and all dealers presently carry out their registration work at the R.T.O office itself.
- Dealers who have been in the trade for the past five years, including those doing GPS-related work, must be recognised and protected in their livelihood.
- Persons engaged in fitting devices on vehicles must be given a fair opportunity to do so. The permissions and procedures involved must be made clear.
- No one may act in a way that threatens or intimidates the workers and dealers who work at R.T.O offices.
- Work given to SLD dealers at R.T.O offices must be allocated fairly. Matters arising in this regard are to be brought to the association for discussion.
- அனைத்து R.T.O அலுவலகங்களிலும் R.T.O அங்கீகரிக்கப்பட்ட டீலர்கள் இருந்து வருகின்றனர். தற்போது அனைத்து டீலர்களும் R.T.O அலுவலகத்திலேயே தொழில் செய்து வருகிறார்கள்.
- கடந்த ஐந்து வருடங்களாக தொழில் செய்து வருபவர்கள் மற்றும் G.P.S. தொடர்பான பணிகளைச் செய்து வருபவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும்.
- வாகனங்களில் பொருத்தும் தொழில் செய்யும் நபர்களுக்கு அதற்கான வாய்ப்பு கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான அனுமதி மற்றும் நடைமுறைகள் குறித்து தெளிவு தேவை.
- R.T.O அலுவலகங்களில் வேலை செய்யும் அல்லது தொழில் புரியும் தொழிலாளர்களையும் டீலர்களையும் அச்சுறுத்தும் வகையிலும் பயமுறுத்தும் வகையிலும் யாரும் செயல்படக் கூடாது.
- R.T.O அலுவலகங்களில் வேலை செய்யும் SLD டீலர்களுக்கு வேலை வழங்கப்படுவது நியாயமாக இருக்க வேண்டும். இது தொடர்பான விஷயங்கள் சங்கத்தில் விவாதிக்கப்பட வேண்டும்.
-
Resolution 2தீர்மானம் – 2
Livelihood of small dealers and fair pricing
சிறு டீலர்களின் வாழ்வாதாரமும் நியாயமான விலையும்
- Dealers working at R.T.O offices must work with their livelihood in mind and pay close attention to the fitting of SLD and other devices.
- Small dealers are being hurt because distributors are taking all of the work for themselves.
- Devices are being fitted at prices far below the proper selling price. This is unjust: everyone who comes to an R.T.O office for work must carry it out at the proper price.
- Small dealers must also receive work and a fair income.
- Appropriate steps must be taken so that the workers and small dealers who work with distributors are not harmed. The association is to find the solution.
- R.T.O அலுவலகங்களில் தொழில் புரியும் டீலர்கள், தங்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு வேலை செய்ய வேண்டும். SLD மற்றும் பிற சாதனங்களைப் பொருத்துவது குறித்து கவனம் செலுத்த வேண்டும்.
- DISTRIBUTOR-கள் அனைத்து வேலைகளையும் தங்களிடமே எடுத்துக்கொள்வதால் சிறு டீலர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
- சாதனங்கள் முறையான விற்பனை விலையை விட மிகக் குறைந்த விலையில் பொருத்தப்படுகின்றன. இது நியாயமல்ல. R.T.O அலுவலகத்தில் வேலை நிமித்தம் வரும் அனைவரும் முறையான விலையில் பணிகளைச் செய்ய வேண்டும்.
- சிறு டீலர்களுக்கும் வேலை வாய்ப்பும் நியாயமான வருமானமும் கிடைக்க வேண்டும்.
- DISTRIBUTOR-களிடம் வேலை செய்யும் தொழிலாளர்களும் சிறு டீலர்களும் பாதிக்கப்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சங்கத்தின் மூலமாகத் தீர்வு காணப்பட வேண்டும்.
-
Resolution 3தீர்மானம் – 3
Tools, materials and association identity cards
கருவிகள், பொருட்கள் மற்றும் சங்க அடையாள அட்டை
- The office-bearers of the association must reach a decision on the tools and materials used for the work.
- The sale of these materials by distributors, and the rights of those who work at R.T.O offices, were discussed.
- Dealers and members of the association are to be photographed through the association and identified at R.T.O offices by an I.D. Card.
- No one may work at an R.T.O office without an I.D. Card and uniform.
- Action is to be taken against dealers who do not hold the I.D. Card issued by the association. Everyone coming to work at R.T.O offices must carry proper identification, and the necessary permission is to be obtained for this.
- வேலைக்குப் பயன்படும் கருவிகள் மற்றும் பொருட்கள் தொடர்பாக சங்கத்தின் நிர்வாகிகள் ஒரு முடிவு மேற்கொள்ள வேண்டும்.
- DISTRIBUTOR-கள் இப்பொருட்களை விற்பனை செய்வது குறித்தும், R.T.O அலுவலகத்தில் பணிபுரிவோரின் உரிமைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
- சங்கத்தின் மூலமாக புகைப்படம் எடுக்கப்பட்டு, சங்கத்தின் டீலர்கள் மற்றும் அங்கத்தினர்கள் R.T.O அலுவலகங்களில் I.D. Card மூலம் அடையாளப்படுத்தப்பட வேண்டும்.
- I.D. Card மற்றும் சீருடை இல்லாமல் யாரும் R.T.O அலுவலகங்களில் பணி செய்யக் கூடாது.
- சங்கத்தின் சார்பாக வழங்கப்படும் I.D. Card இல்லாத டீலர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். R.T.O அலுவலகங்களுக்குப் பணி செய்ய வரும் அனைவரும் உரிய அடையாள அட்டையுடன் வர வேண்டும். இதற்கான அனுமதியைப் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.